பெய்ஜிங், நவம்பர் 10 - தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியான நிங்சி நகரில் உள்ள மெடாக் கவுண்டியில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெய்ஜிங் நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 1.01 மணியளவில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் (சிஇஎன்சி) தெரிவித்துள்ளது.
சின் ஹுவாவின் கூற்றுப்படி, நிலநடுக்கம் 28.35 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 94.48 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று சிஇஎன்சி தெரிவித்துள்ளது.


