ஜோர்ஜ் டவுன், நவ 10- பினாங்கு மாநிலமும் சிலாங்கூரைப் பின்பற்றி பொதுத் தேர்தலுக்கு முதல் நாளான நவம்பர் 18ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
வரும் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் நாட்டின் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாக பினாங்கு முதலமைச்சர் சாவ் கூன் இயோ கூறினார்.
வரும் 9 நவம்பர் 2022 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் நாட்டின் 15வது பொதுத் தேர்தலை முன்னிட்டு நவம்பர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமையை சிறப்பு பொது விடுமுறையாக அறிவிக்க மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது என்று அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்கள் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வசம் உள்ளன.
பினாங்கில் மொத்தம் 12 லட்சத்து 26 ஆயிரத்து 626 வாக்காளர்கள் உள்ளதை தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.


