ஷா ஆலம், நவ. 10: அதிக ஆபத்துள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் முதியோர் எளிதில் தொற்றக்கூடிய நோயாளிகளுக்கு, இலக்காவதை தடுக்கவும், ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்வதற்காக 10,000 டோஸ் நிமோகோகல் தடுப்பூசியை இலவசமாக வழங்க மாநில அரசு RM 15 லட்சம் ஒதுக்கியுள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கிய திட்டத்தின் முதல் கட்டமாக டிசம்பர் 31 ஆம் தேதி வரை முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் இல்திசம் சிலாங்கூர் சிஹாட் (ஐ.எஸ்.எஸ்) அட்டை வைத்திருப்பவர்கள் இலக்காகக் கொண்டதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"மக்கள், குறிப்பாக வயதானவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சுவாச நோய்த் தொற்றுகளின் அதிகரித்து வரும் புள்ளிவிவரங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
"இந்த திட்டம் செல்வாக்ஸ் மொபைல் டீம் மற்றும் செல்கேர் கிளினிக் ஆகிய இரண்டு முறைகள் மூலம் செயல்படுத்தப்படும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று ஒரு சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பொது சுகாதாரக் குழு மற்றும் சிலாங்கூர் பொது சுகாதார ஆலோசனைக் குழு (செல்பேக்) மூலம் இந்த முயற்சியை சாத்தியமாக்கியது என்றும் அவர் கூறினார்.


