ECONOMY

நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இளைஞர், கல்வி, உணவு விவகார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தருவேன் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 

10 நவம்பர் 2022, 4:03 AM
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இளைஞர், கல்வி, உணவு விவகார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தருவேன் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இளைஞர், கல்வி, உணவு விவகார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தருவேன் - டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 

கோம்பாக், நவ 10: 15வது பொதுத் தேர்தலில் கோம்பாக் வாக்காளர்கள் தன்னை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்தால் இளைஞர், கல்வி, உணவு விவகார பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தருவேன் என குறிப்பிட்டார் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

இவ்விவகாரங்கள் நீண்ட நாட்களாக தன் மனதில் உள்ளதாகவும் மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கு இந்த விவகாரங்கள் முன்னிலைப் படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

"நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர்களாக, இங்குள்ள கோம்பாக் நாடாளுமன்ற மக்களின் தலைவிதி மற்றும் உரிமைகள் மீதான மேலதிகமாக தேசியக் கொள்கைகள் பற்றிய விவாதத்தில் "கல்விக் கொள்கை, உணவு விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் இளம் தலைமுறையினரின் வளர்ச்சி போன்ற பிரச்சினைகள் வாய்ப்பு கிடைத்தால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும்" என்று அவர் நேற்று பிற்பகல் இங்குள்ள பிளாட் தாமான் சமுத்திரத்தில் குடியிருப்பாளர்கள் உடனான தேநீர் உபசரிப்புக்கு பிறகு கூறினார்.

இதற்கிடையில், நில மேலாண்மை, மக்களின் தலைவிதி, கல்வி, பொருளாதாரம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் நாளை விவாதிக்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

முன்னதாக அவர் அப்பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி நோயாளி ரத்னா ஜூதா அம்ரன், 52, மற்றும் நோயால் கிட்டத்தட்ட பார்வையற்ற முதியவர் எம். சுப்பிரமணியம், 68, உட்பட பல வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்தார்.

கெஅடிலான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான அமிருடின் மற்ற நான்கு போட்டியாளர்களுக்கு எதிராக வாக்குச் சீட்டில் இரண்டாவது வேட்பாளராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.