பந்திங், நவ 10 - வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் நாடு முழுவதும் மொத்தம் 6,010 தற்காலிக நிவாரண மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரினா முகமட் ஹாருன் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் உதவுவதற்கு பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு சமூக நலத் துறை (ஜேகேஎம்) மூலம் முழு தயார் நிலையில் உள்ளதோடு நாடு முழுவதும் உள்ள பேரிடர் சேமிப்புக் கிடங்குகளில் அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் அனுப்பப்படுவதற்கு தயாராக உள்ளன என்று அவர் கூறினார்
இந்த தற்காலிக நிவாரண மையங்களில் 35 சதவீதம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ள 15வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மையங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளது கவலையளிப்பதாக உள்ளது என்று ரினா தெரிவித்தார்.
நேற்று முன்தினம், பகாங், சிலாங்கூர், ஜோகூர் மற்றும் சரவாக் ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறை (ஜேபிஎஸ்) வெளியிட்டது.


