ஈப்போ, நவம்பர் 10 - அறுபது பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சறுக்கி பள்ளத்தில் கவிழ்ந்து. இச்சம்பவம் நேற்று மாலை தஞ்சோங் மாலிமில் உள்ள ஜாலான் ஸ்லிம் லாமாவில் நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் இரவு 7.00 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக முவாலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்ட். முகமது ஹஸ்னி முகமது நசீர் கூறினார்.
கோத்தா மாலிம் பிரிமா சாலை சந்திப்பிற்கு அருகே இந்த விபத்து ஏற்பட்டது. ஓட்டுநர் உட்பட 11 பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிலிம் ரிவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும் மேலதிக தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, விபத்து குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்துதாங்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டதாக தஞ்சோங் மாலிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் முகமது ஜைருல் ஃபஹ்மி முகமது நசாரி பெர்னாமாவிடம் கூறினார்.


