ECONOMY

மக்கள் நல்வாழ்வுக்கு சிறந்த நகர 2022 விருதில் எம்பிஎஸ் முதல் இடத்தைப் பெற்றது

9 நவம்பர் 2022, 9:20 AM
மக்கள் நல்வாழ்வுக்கு சிறந்த நகர 2022 விருதில் எம்பிஎஸ் முதல் இடத்தைப் பெற்றது

ஷா ஆலம், 9 நவம்பர்: செலாயாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்) நேற்று மக்கள் நல்வாழ்வுக்கு சிறந்த நிலையான நகர விருது 2022 இல் (நகராட்சி வகை) முதல் இடத்தைப் பெற்றது.

2022 ஆம் ஆண்டு தேசிய அளவில் உலக நகர்ப்புற திட்டமிடல் தினத்தை கொண்டாடும் வகையில் இந்த விருது வழங்கப் பட்டுள்ளதாக ஊராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

புத்ரா ஜெயாவில் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ எம் நூர் அஸ்மான் தாயிப் தலைமையில் விழா நடைபெற்றது.

" வளர்ச்சியில் குறிப்பாக தரமான மற்றும் வளமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குவதில் நகர்ப்புற திட்டமிடுபவர்கள் பங்கைக் கொண்டாடவும் பாராட்டவும் தேசிய அளவில் உலக நகர்ப்புற திட்டமிடல் தினம் நடத்தப்படுகிறது.

" வெற்றி அடைந்த எம்பிஎஸ்க்கு வாழ்த்துகள், இது ஒரு நிலையான, முற்போக்கான மற்றும் வளமான நகரமாக இருக்கட்டும்" என்று அவர் நேற்று பேஸ்புக்கில் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.