ஷா ஆலம், நவ 9- பினாங்கு மாநிலத்தில் அஸான் தொழுகைக்கு தடை விவகாரம் தொடர்பில் ஜசெகவுக்கு எதிராக அவதூறு பரப்பியதற்காக நாட்டின் பிரபல பாடகர் டத்தோ ஜமால் அப்டில்லா மன்னிப்பு கோரினார்.
நடப்பு அரசியலின் உண்மை நிலவரம் தெரியாமல் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிராக தாம் அந்த குற்றச்சாட்டை முன்வைத்து விட்டதாக அவர் கூறினார்.
எனக்கு தெரியாத ஒரு விஷயத்தை திரித்துக் கூறியதற்காக பக்கத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சியிடம் மிகத் தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்டில்லா கூறியதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் அஸான் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஜசெகவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று அந்த பாப் பாடகர் டிக்டாக் செயலி வழி கேட்டுக் கொண்டார்.


