கோம்பாக், நவ 9- வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தாம் போட்டியிடும் கோம்பாக் தொகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ பணிகளை மேற்கொள்வதின்றும் விடுமுறை எடுத்துள்ள போதிலும் வெள்ளப் பிரச்னைகளை கையாள விரைந்து களமிறங்கத் தயாராக உள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிமையும் இதர ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் தாம் அடிக்கடி தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்து வருவதாக அமிருடின் சொன்னார்.
அவசியம் ஏற்படும் பட்சத்தில் தாம் விடுமுறையை ரத்து செய்து விட்டு மாநில அரசு நிர்வாகத்திற்கு தலைமையேற்று சீரான நிர்வாகத்தை உறுதி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் அதேவேளையில் உயர்ந்த பட்ச தயார் நிலையிலும் உள்ளோம். இது நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் இக்காலக்கட்டத்தில்
மழைப்பொழிவு அதிகமாக இருப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்கு நடைபெற்ற மூடா கட்சித் தலைவர் சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மானுடன் கோம்பாக் இளைஞர்கள் எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
நேற்று மாலை பெய்த பலத்த காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. ஷா ஆலம் நகரின் செக்சன் 13,17,24,25 மற்றும் 32 உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.


