ECONOMY

சுங்கை பூலோ மேம்பாடு கண்டது பக்கத்தான் ஆட்சியில்தான், பாரிசான் ஆட்சியில் அல்ல- வாக்காளர்கள் கருத்து 

9 நவம்பர் 2022, 4:54 AM
சுங்கை பூலோ மேம்பாடு கண்டது பக்கத்தான் ஆட்சியில்தான், பாரிசான் ஆட்சியில் அல்ல- வாக்காளர்கள் கருத்து 

ஷா ஆலம், நவ 9- தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) ஆட்சியில் இருந்த காலத்தை விட 2008ஆம் ஆண்டுக்கு பிந்தைய பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியில்தான் சுங்கை பூலோ தொகுதி அதிக மேம்பாட்டையும் மாற்றங்களையும் கண்டுள்ளது.

வரும் பதினைந்தாவது பொதுத் தேர்தலில் மீண்டும் வெல்லும் பட்சத்தில் அக்கூட்டணி மூலம் மேலும் அதிகமான அனுகூலங்கள் இத்தொகுதிக்கு கிடைக்கும் சாத்தியம் உள்ளதாக தொகுதி வாக்காளரான எஸ்.அருள்நேசன் (வயது 74) கூறினார்.

பாரிசானின் நீண்ட கால ஆட்சியில் இப்பகுதி குறைவான மேம்பாடுகளையே கண்டது. ஹராப்பான் நுழைந்ததும் மாற்றங்களைக் காண முடிந்தது. ஹராப்பானுக்கு கிடைத்தது குறைந்த கால அவகாசமே. கூடுதல் காலம் பதவியில் இருக்கும் பட்சத்தில் அக்கூட்டணியால் அதிகம் சாதிக்க முடியும் என்றார் அவர்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக மக்கள் பிரதிநிதிகள் சாலையோரங்களில் நடைபாதைகளை அமைத்து தருவார்கள் எனத் தாம் நம்புவதாக சுமார் 30 ஆண்டுகளாக சுங்கை பூலோவில் வசித்து வரும் அருள்நேசன்  தெரிவித்தார்.

இப்பொதுத் தேர்தலில் சுங்கை பூலோ தொகுதியில் ஏழு முனைப் போட்டி நிலவுகிறது. பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளரான டத்தோ ஆர். ரமணன் மற்றும் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் ஆகியோர் இத்தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.