ஷா ஆலம், நவ 9: செகாம்புட்டில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் முகங்களைக் காட்டும் பல சுவரொட்டிகள் மற்றும் விளம்பரப் பலகைகள் பொறுப்பற்ற நபர்களால் சேதப்படுத்தப்பட்டன.
பல இடங்களில் ஹன்னா யோஹ்வின் பிரச்சார சுவரொட்டிகள், கொடி மற்றும் வேட்பாளர் படங்கள் கிழிக்கப்பட்டு, வெட்டப்பட்டிருந்தது என்று ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்தார்.
"தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TTDI) இன் குடியிருப்பாளர்கள் இன்று காலை ஹராப்பான் கொடி வெட்ட பட்டதாகவும், எனது விளம்பர பலகை பல இடங்களில் சேதப்படுத்தப் பட்டதாகவும் தெரிவித்தனர்.

"நாங்கள் பணக்காரர்கள், ஊழலில் சம்பாதித்தவர்கள் அல்லது நாட்டை கொள்ளையிட்டவர்களோ அல்ல. எங்கள் சுவரொட்டிகள் மற்றும் போஸ்டர்கள் கூட சாதாரண வாக்காளர்களிடம் இருந்து பெற்ற நன்கொடைகளிலிருந்து தயார் படுத்தப்பட்டது என்பதால், மக்களின் நன்கொடைகளை பாழாக்கும் செயல் காண வருத்தமாக இருக்கிறது.
அரசியலை அழுக்கு மற்றும் கேவலமான தாக்காமல், தயவு செய்து தூய்மையாகப் போட்டியிடுங்கள்," என்று 2018 முதல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் வகித்துள்ள அவர் கூறினார்.
மேலும் நடவடிக்கைக்கு hannah@hannahyeoh.com என்ற மின்னஞ்சல் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்ள சிசிடிவி காட்சிகளை கொண்ட குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பை அவர் கேட்டுக் கொண்டார்.


