ஷா ஆலம், நவ. 9 - இன்று மாலை தாமான் ஸ்ரீ மூடாவின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு தற்போது கட்டுக்குள் உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு நிகழ்வு காரணமாக தாமான் ஸ்ரீ மூடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுங்கை கிள்ளான் பகுதியில் திடீரென நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
"நாங்கள் உடனடியாக தாமான் ஸ்ரீ மூடாவில் மதகு கதவுகளை மூடினோம், ஆனால் கோத்தா கெமுனிங், செக்சன் 13, செக்சன் 17 மற்றும் தாமான் மேஸ்ரா போன்ற சில பகுதிகளில் தண்ணீர் துரதிர்ஷ்டவசமாக உயர்ந்தது.
முன்னதாக, வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறையின் (டிஐடி) கீழ் உள்ள தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை மையம் (பிஆர்ஏபிஎன்) சிலாங்கூரின் கோம்பாக், பெட்டாலிங், கோலா சிலாங்கூர் மற்றும் சிப்பாங் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு திடீர் வெள்ளத் தயார்நிலை அறிவிப்பை வெளியிட்டது.


