ECONOMY

பாங்கியில் உள்ள பல் சிகிச்சையகத்தில் கொள்ளையடித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்

8 நவம்பர் 2022, 5:01 AM
பாங்கியில் உள்ள பல் சிகிச்சையகத்தில் கொள்ளையடித்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்

கோலாலம்பூர், நவ 8: பாங்கி பண்டார் ஸ்ரீ புத்ராவில் உள்ள பல் சிகிச்சையகத்தில் நேற்று நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது ஜைட் ஹாசன், இந்த சம்பவம் குறித்து தனது தரப்பில் ஒரு புகார் பெற்றுள்ளதாக கூறினார். அந்த கிளினிக் தொடர்பில் வைரலான வீடியோவில் தலைக்கவசம் அணிந்த இருவர் பாராங் கத்தி ஏந்தி அறைக்குள் நுழைந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கொள்ளையடித்ததாக கூறினார்.

"சந்தேக நபர் ஒரு மேக்புக், இரண்டு மொபைல் போன்கள், கிட்டத்தட்ட RM2,000 ரொக்கம் மற்றும் ஒரு தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றனர்.

"இந்த சம்பவத்தில், வளாகத்திற்குள் இருந்த பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை," என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்களைக் கொண்டு குழுக் கொள்ளையடிப்பதற்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 395/397 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக  முகமது ஜைட் கூறினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது விசாரணை அதிகாரி முகமது ரஜிமான் ரசிட்டை 019-4565502 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.