கோம்பாக், நவம்பர்.7- செலாயாங் பாரு குருத்வாரா ஆலயத்தின் கோரிக்கைகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட்டது, விரைவில் சிலாங்கூர் திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் எஸ்கோ ஹி லொய் சியான் இங்கு வருகை புரியவுள்ளார், அவரிடம் மேம்பாட்டுக்கான கோரிக்கைகளை முன் வைக்க கேட்டுக் கொண்டார் கோம்பாக் தொகுதியின் வேட்பாளர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி.
இன்று செலாயாங் பாரு குருத்வாரா சாஹிப் ஆலயத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தில் சீக்கியர்களின் ஒற்றுமையை பாராட்டி பேசிய அவர் அனைவரும் இப்படி ஒற்றுமையாக இருப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒற்றுமையின் பலம் என்ன என்பதை சீக்கிய நண்பர்களை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம் என்றார் அவர்.
மேலும் கோம்பாக் தொகுதியில் இருக்கும் அனைத்து சீக்கியர்களும் என் நெருங்கிய நண்பர்கள் என்றும் அவர் கூறினார். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஏற்ப நாம் எல்லாம் ஒன்றாக செயல்பட்டால் இந்த கோம்பாக் தொகுதியை மேன்மை படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த வேளையில் விரைவில் இடமாற்றம் கான இருக்கும் இந்த குருத்வாரா சாஹிப் ஆலயம் இடம் மாற்றம் கண்ட பின் அந்த இடத்திற்கு என்ன தேவை வேண்டியதாக இருந்தாலும் என்னை நாடி வரலாம் என்றும் அவர் கூறினார்.
செய்தி- ஆர்.பார்த்திபன்


