ECONOMY

பந்தாய் ரெமிஸில் காட்டுப்பன்றி தாக்கியதில் ஒருவர் பலி, இருவர் காயமடைந்துள்ளனர்

7 நவம்பர் 2022, 6:40 AM
பந்தாய் ரெமிஸில் காட்டுப்பன்றி தாக்கியதில் ஒருவர் பலி, இருவர் காயமடைந்துள்ளனர்

ஈப்போ, நவ 7- பந்தாய் ரெமிஸ், ஜாலான் கம்போங் பாயா ஆராவில் காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் இருவர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர் சைபுல் அனுவார் அப்துல் வஹாப் (46) என்று அடையாளம் காணப்பட்டார், அவர் தனது பண்ணைக்குச் சென்று கொண்டிருந்தபோது காட்டுப்பன்றியால் தாக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“49 மற்றும் 60 வயதுடைய மற்ற இரண்டு ஆண்கள், தாக்குதலுக்கு ஆளானவருக்கு உதவ முயன்றபோது லேசான காயம் அடைந்தனர்.

"பந்தாய் ரெமிஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இரவு 7.05 மணியளவில் சம்பவம் குறித்து அழைப்பு வந்தது" என்று செய்தித் தொடர்பாளர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்ததோடு, மேலதிக நடவடிக்கைகளுக்கு சடலம் போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தீயணைப்பாளர்கள் போலிசாருக்கு விளக்குகளை வழங்கி உதவியதாகத் தெரிவித்த செய்தித் தொடர்பாளர், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காட்டுப்பன்றி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.