ECONOMY

15வது பொதுத் தேர்தல்: சுங்கை பூலோ வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி இளைஞர்களுக்கான சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையம் உருவாக்குவதாகும்

7 நவம்பர் 2022, 6:35 AM
15வது பொதுத் தேர்தல்: சுங்கை பூலோ வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி இளைஞர்களுக்கான சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையம் உருவாக்குவதாகும்
15வது பொதுத் தேர்தல்: சுங்கை பூலோ வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி இளைஞர்களுக்கான சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையம் உருவாக்குவதாகும்

ஷா ஆலம், நவ 7- சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர் ரமணன், நடந்து வரும் 15வது பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தத் தொகுதி இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அவரது கணிப்பின்படி, தற்போது உள்ள விளையாட்டு மையங்கள் செபாக் தக்ரோ, பேட்மிண்டன் மற்றும் ஃபுட்சல் போன்ற விளையாட்டு நடவடிக்கைகளுக்கு சரியான இடத்தை வழங்க முடியவில்லை.

“இளைஞர்களுக்காக, சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம், இது எங்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல.15வது பொதுத் தேர்தலில் ஹரப்பான் ஒட்டுமொத்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு மேல், அந்தப் பகுதி மக்களுக்கு நாங்கள் செய்யக்கூடியதாக இது இருக்கும் என்றார்.

"கூடுதலாக, இந்த நாட்களில் இளைஞர்கள் அதிக அளவில் இ- ஸ்போர்ட்ஸில் ஈடுபடுவதால், சூப்பர் ஸ்போர்ட்ஸ் மையத்தில் சரியான இடத்தையும் நாங்கள் வழங்குவோம், அங்கு விளையாட்டாளர்கள் மையத்தின் வசதிகளைப் பயன்படுத்தி கொள்ளலாம்" என்று ரமணன் சுங்கை பூலோவில் நடந்த செராமா மெகா பாயா ஜாராஸ் நிகழ்ச்சியின் போது கூறினார்.

அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தனது பதவிக் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலவான்ஸ்  மற்றும் கூடுதல் கொடுப்பனவுகளை எடுக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்தார்.

“எனது நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளத்தை நான் பயன்படுத்த மாட்டேன், ஒரு ரிங்கிட் கூட எடுக்கப் போவதில்லை. உண்மையில் இந்தப் பணம் சுங்கை பூலோவில் உள்ள உள்ளூர் சமூகங்களுக்கும், முஸ்லீம் மற்றும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கும் திரும்பக் கொடுக்கப்படும்,” என்றார்.

15வது பொதுத் தேர்தலுக்கான சுங்கை பூலோ தொகுதியில் ஏழு முனைப் போட்டி நிலவுகிறது, இதில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் உள்ளிட்ட வேட்பாளர்கள் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடுகின்றனர், மற்றும் முகமது கசாலி முகமது ஹமீன் பெரிக்காத்தான் நேஷனல் கீழ் போட்டியிடுகின்றனர்.

பெஜூவாங் கட்சி சார்பில் முகமது அக்மல் முகமது யூசோப், பார்ட்டி ரக்யாட் மலேசியா சார்பில் அகமது ஜுஃப்லிஸ் ஃபைசா மற்றும் சுயேட்சை வேட்பாளர்களான சையட் அப்துல் ரசாக் சையட் லோங் அல்சகோஃப் மற்றும் நூர்ஹஸ்லின்டா பஸ்ரி ஆகியோர் களம் இறங்கியுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.