கோம்பாக், நவ 6- வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் 20
நாடாளுமன்றத் தொகுதிகளை அடையும் இலக்கை அடைய ஹராப்பான்
உறுப்பினர்கள் அனைவரும் பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்று
வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்களின் மன உணர்வு மற்றும் ஆதரவை வைத்து பார்க்கையில் கடந்த
2018 ஆம் ஆண்டில் பக்கத்தான் ஹராப்பான் வென்ற அனைத்து
தொகுதிகளையும் இம்முறையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை
ஏற்படுவதாக சிலாங்கூர் மாநில ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ள நாம் நமது உழைப்பை
இரட்டிப்பாக்கினால் போதும் என்று கோம்பாக் தொகுதிக்கான ஹராப்பான்
வேட்பாளருமான அவர் சொன்னார்.
இன்று இங்குள்ள கம்போங் ஃபாஜாருக்கு வருகை புரிந்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் 19 தொகுதிகளை பக்கத்தான்
ஹராப்பான் வெல்ல முடியும் என கெஅடிலான் கட்சியின் துணைத்
தலைவர் ரபிஸி ரம்லி கூறியிருந்தது தொடர்பில் அவர் இவ்வாறு
கருத்துரைத்தார்.


