பாங்கி, நவ 5- வரும் 15வது பொதுத் தேர்தலில் பாங்கி நாடாளுமன்றத் தொகுதியில் எட்டு முனைப் போட்டி நிலவுகிறது. அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்குவது நாட்டில் ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதை புலப்படுத்துவதாக உள்ளது என்று பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஷியரிட்ஸான் ஜோஹான் கூறினார்.
[caption id="attachment_474209" align="alignleft" width="375"]
Calon HARAPAN Selangor Parlimen Bangi Syahredzan Johan[/caption]
அதிகப்படியான வேட்பாளர்கள் எண்ணிக்கையை எதிர் மறையான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்றும் அவர் சொன்னார்.
அதிகமான வேட்பாளர்கள் பாங்கி தொகுதியில் போட்டியிடுவது நாட்டில் ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதை பிரதிபலிக்கிறது. இதனை நாம் வரவேற்க வேண்டும் என்றார் அவர்.
பண்டார் பாரு பாங்கி, டேவான் டிமேன்சேவில் இன்று காலை நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் நிகழ்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பாங்கி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வருமாறு-
- ஷியாரிட்ஸான் ஜோஹான்- பக்கத்தான் ஹராப்பான்
- ஹோ ஹீ லீ- தேசிய முன்னணி
- முகமது நஸ்ருள் ஹக்கிம்- பெரிக்கத்தான் நேஷனல்
- அனுவார் சாலே- பெஜூவாங்
- சுதன் மூக்கையா- சுயேச்சை
- முகமது பவுசி ஹக்கிம்- சுயேச்சை
- சீ சீ மெங்- பார்ட்டி ராக்யாட் மலேசியா
- ஜமால் ஹிஷாம் ஹஷிம்- சுயேச்சை


