ANTARABANGSA

அபராதத் தொகை கழிவு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு- எஸ்.எஸ்.எம். அறிவிப்பு

31 அக்டோபர் 2022, 8:33 AM
அபராதத் தொகை கழிவு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு- எஸ்.எஸ்.எம். அறிவிப்பு

கோலாலம்பூர், அக் 31- மலேசிய நிறுவன ஆணையம் (எஸ்.எஸ்.எம்.) 1965 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத் தொகைக்கு கழிவு வழங்கும் சலுகையை நம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கவுள்ளது.

இதன் வழி 1965 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராத தொகையில் 90 விழுக்காடு வரை கழிவைப் பெறுவதற்கான வாய்ப்பு நிறுவனங்களுக்கும் அதன் இயக்குநர்களுக்கும் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்ட திட்டத்திற்கேற்ப நடப்பதற்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்கும்  பெருந்தொற்றுக்கு பிந்தைய மீட்சி கட்டத்தை நோக்கி நாடு பயணிக்கும் வேளையில் ஏற்படக்கூடிய நிதிச் சுமையைக் குறைப்பதற்கும் ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்படுதாக எஸ்.எஸ்.எம். கூறியது.

தொடக்கத்தில் மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை இந்த அபராதக் கழிவு வழங்கப்பட்டது. பின்னர் அது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

தங்களின் அபராதத் தொகை தொடர்பான விபரங்களை பொது மக்கள் ar_compliance@ssm.com.my என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது அருகிலுள்ள எஸ்.எஸ்.எம். அலுவலகங்களை நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் பெற முடியும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.