ஷா ஆலம், அக் 31- இம்மாதம் 25 முதல் 30 வரை இங்கு நடைபெற்ற அகில மலேசிய மாநில அரசு செயலகங்களுக்கிடையிலான விளையாட்டிப் போட்டியில் (சுக்செம்) சிலாங்கூர் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
உபசரணை குழுவான சிலாங்கூர் பப்ஜி மற்றும் மோபைல் லெஜெண்ட் ஆகிய ஆட்டங்கள் வாயிலாக மின்-விளையாட்டில் ஒரு தங்கப் பதக்கமும் வலைப்பந்து மற்றும் போலிங் மூலம் இரு வெள்ளிப் பதக்கங்களும் பெற்று 22 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை அடைந்தது.
சரவா மாநிலம் 51 புள்ளிகளுடன் இந்த தவணைக்கான வெற்றியாளராக வாகை சூடியது. இப்போட்டியில் அக்குழுவுக்கு மூன்று தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. சபா மாநிலம் 3 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்த போட்டியை சிலாங்கூர் முதன் முறையாக ஏற்று நடத்தியது.


