ACTIVITIES AND ADS

கெடாவில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்ளை ஹராப்பான் அறிவித்தது- பாடாங் செராயில் கருப்பையா போட்

30 அக்டோபர் 2022, 4:43 AM
கெடாவில் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்ளை ஹராப்பான் அறிவித்தது- பாடாங் செராயில் கருப்பையா போட்

சுங்கை பட்டாணி, அக் 30- அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும்

நாட்டின் 15வது பொதுத் தேர்தலின் போது கெடா மாநிலத்தில்

போட்டியிடவிருக்கும் 14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்

பட்டியலை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நேற்று வெளியிட்டது.

நேற்று இங்கு நடைபெற்ற ஹராப்பான் வேட்பாளர் பட்டியல் வெளியீட்டு

நிகழ்வின் போ கெடா மாநில ஹராப்பான் கூட்டணியின் தகவல் பிரிவுத்

தலைவர் டத்தோ டாக்டர் இஸ்மாயில் சாலே இத்தகவலை வெளியிட்டார்.

அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒன்பது பி.கே.ஆர். வேட்பாளர்களின்

பெயர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வேளையில் இந்நிகழ்வில்

அமானா கட்சி சார்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் மற்றும்

ஜசெக சார்பில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின்ப பெயர்

அறிவிக்கப்பட்டது.

அமானா கட்சி சார்பில் பாடாங் தெராப் தொகுதியில் முவாஸ் அப்துல்லா

போட்டியிடும் வேளையில் பொக்கோ செனா தொகுதியில் டத்தோ மாபுஸ்

ஓமார் களம் காண்கிறார். சிக் தொகுதியில் டத்தோ லத்திபா முகமது

யாத்திமும் பாலிங்கில் ஜோஹாரி ஷாரிப்பும் போட்டியிடுகின்றனர்.

ஜெராய் தொகுதியில் ஜசெகவை பிரதிநிதித்து ஜூல்ஹஸ்மி ஷாரிப்

போட்டியிடுகிறார்.

இதனிடையே, லங்காவி தொகுதிக்கான வேட்பாளர் பெயர் பின்னர்

அறிவிக்கப்படும் என்று கெடா மாநில ஹராப்பான் தலைவர் டத்தோ

மாபுஸ் ஓமார் கூறினார்.

லங்காவி நீங்கலாக கெடா மாநிலத்திலுள்ள 14 நாடாளுமன்றத்

தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் வருமாறு-

1. ஜெர்லுன்- டத்தே முகமது பாட்சில் முகமது அலி

2. குபாங் பாசு- அய்ஸுடின் அரிபின்

3. பாடாங் தெராப்- முவாஸ் அப்துல்லா

4. பொக்கோ செனா- டத்தோ மாபுஸ் ஓமார்

5. அலோர்ஸ்டார்- சைமன் ஊய் ஸி மின்

6. கோல கெடா- டாக்டர் அஸ்மான் இஸ்மாயில்

7. பெண்டாங் – டத்தோ ஜூல்கிப்ளி முகமது

8. ஜெராய்- ஜூல்ஹாஸ்மி ஷாரிப்

9. மெர்போக்- நோர் அஸ்ரினா சுரிப்

10. சிக்- டத்தோ லத்திபா முகமது யாத்திம்

11. சுங்கை பட்டாணி- டாக்டர் முகமது தாவ்பிக்

12. பாலிங்- ஜோஹாரி அப்துல்லா

13. பாடாங் செராய்- எம் கருப்பையா

14. கூலிம் பண்டார் பாரு- டத்தோஸ்ரீ சைபுடின் நசாத்தியோன் இஸ்மாயில்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.