ECONOMY

மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுனர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

29 அக்டோபர் 2022, 9:23 AM
மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு மரணத்தை ஏற்படுத்திய விபத்தில் தொடர்புடைய லாரி ஓட்டுனர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

மலாக்கா, 29 அக்: அயர் கெரோ மேம்பாலம் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் (பிளஸ்) நேற்று கேஎம் 216 வடக்கு நோக்கிச் செல்லும் விபத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழக்க காரணமான லாரி ஓட்டுநரை  திங்கட்கிழமை வரை 3 நாட்கள் ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டார்.

43 வயதான நபருக்கு எதிராக உதவி நீதிமன்றப் பதிவாளர் சியாரினா ஷாராணி @ டான் என்பவரால் விசாரனைக்கு   தடுத்து வைக்க  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று, காலை 11 மணியளவில் கார் மற்றும் லாரி மோதிய விபத்தில், ஜுபைடா அப்துல் ராஜாக் மற்றும் அவரது கணவர் முகமது நஜிருல் சியாபிக் அஸ்மி மற்றும் அவர்களின் ஒரே குழந்தை ஆகிய மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் நடந்த முதற்கட்ட விசாரணையில், சாலை சந்திப்பு தடுப்பை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர், வலதுபுறம் ஓரமாக நிறுத்தி, கூம்பு வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பின்னால் வந்த முகமது நஜிருல் சயாபிக் என்பவர் ஓட்டிச் சென்ற கார் லாரி மீது மோதியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.