ஷா ஆலம், அக் 25- தீபாவளியை முன்னிட்டு கோத்தா அங்கிரிக் தொகுதியைச் சேர்ந்த 40 இந்து குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இங்குள்ள செக்சன் 7, பி.கே.என்.எஸ். அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
ஷா ஆலம் தொகுதி கெஅடிலான் தலைவர் ரோட்சியா இஸ்மாயில் மற்றும் தொகுதி தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
நானும் தொகுதி கெஅடிலான் தலைவர் ரோட்சியா இஸ்மாயிலும் சேர்ந்து ஷா ஆலம், செக்சன் 7 பி.கே.என்.எஸ். குடியிருப்பில் வசிக்கும் 40 குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகம் செய்ததாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஷா ஆலம், செக்சன் 16, செக்சன் 18 மற்றும் யு16 ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் இந்த உதவிப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


