கிள்ளான், 23 அக்: கோவிட் -19 தொற்று நோயை எதிர்கொண்ட பிறகு மக்கள் தங்கள் வாழ்க்கையை சவால்களை சமாளிப்பதில் உதவி செய்வதில் மாநில அரசு உறுதியாக உள்ளது.
தொற்றுநோய் மாநில நிர்வாகம் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பல பாடங்களை கற்பித்ததாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, நம்மை நாமே கவனித்துக் கொள்ள, அதாவது நாம் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கும் ஆற்றலை நாமே வளர்த்துக் கொள்ள மனதார பக்குவப் படுத்தப்பட்டோம். சிறந்த மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்வதற்கான திட்டங்கள், பொறுப்புகள் மற்றும் பணிகள் நம்மிடம் உள்ளன என்பதே இதன் பொருள்.
இதன்வழி மாநில வளங்களை ஒன்று திரட்டி இயக்கவும், சமூகம் அதன் பயனை அனுபவிக்கவும் முடிந்தது" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று இரவு ஜாலான் தெங்கு கிளானாவில் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டத்தில் கூறினார்.
“ஆயிரம் கசப்புகளும், கஷ்டங்கள் இருந்தாலும், யாரும் பின் தங்கிவிடக்கூடாது என்பதற்காக, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் மாநில அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறது அதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுக்குப் பின் இப்பொழுது" எண்டமிக் கட்டத்தில் வெற்றிகரமாக நுழைவதற்கு’’ தங்களை முழுமையாக அர்ப்பணித்து உள்ள அனைத்து மக்களுக்கும், மாநில அரசின் நிர்வாகத்திற்கும் தனது நன்றியை கூறினார் .
முன்னதாக, 1,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொள்ளும் கொண்டாட்டத்தில் சிலாங்கூர் ராஜா மூடாவும் கலந்து கொண்டார்.


