ECONOMY

கோவிட்-19 நோயினால் நேற்று  2,256 பேர் பாதிப்பு- மூவர் மரணம்

22 அக்டோபர் 2022, 3:48 AM
கோவிட்-19 நோயினால் நேற்று  2,256 பேர் பாதிப்பு- மூவர் மரணம்

ஷா ஆலம், அக் 22- நாட்டில் நேற்று 2,256 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை கடந்த 20 ஆம் தேதி 2,561 ஆகவும் 19ஆம் தேதி 2,295 ஆகவும் பதிவானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 77 ஆயிரத்து 387ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் நேற்று வரை மொத்தம் 25,526 பேர் நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 25,425 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,054 பேர் மருத்துவமனையிலும் 47 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கோவிட்-19 தொடர்புடைய மூன்று மரணச் சம்பவங்கள் பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்களின் எணணிக்கை 36,440 ஆக உயர்ந்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.