ALAM SEKITAR & CUACA

டி.என்.பி வெள்ளத்தை எதிர்கொள்ள, 2,500 ஊழியர்கள் 24 மணி நேர பணிக்கு  தயார்

21 அக்டோபர் 2022, 11:01 AM
டி.என்.பி வெள்ளத்தை எதிர்கொள்ள, 2,500 ஊழியர்கள் 24 மணி நேர பணிக்கு  தயார்

கோலாலம்பூர், 21 அக்: தெனாகா நேஷனல் பெர்ஹாட் (டி.என்.பி.) 2,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை விநியோக வலையமைப்புப் பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு அவசரக் குழுவில் இணைந்து வெள்ளப் பணிக்கு  தயார்படுத்தியது.

ஒழுங்கான மின்சார விநியோக நிர்வாகத்தை உறுதிப்படுத்தவும், பொது பாதுகாப்புக்காக மின் நிறுவன  சொத்துகளுக்கு  ஏற்படும் சேதத்தை குறைக்கவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று டி.என்.பி தலைமை விநியோக நெட்வொர்க் அதிகாரி வான் நஸ்மி வான் மாமூட் கூறினார்.

வெள்ளத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் மாநிலங்களில் தளவாட உதவிகள் 296 மொபைல் பவர் செட்கள் உட்பட 227 5kW/2.5kW சிறிய பவர் செட்கள்; 279 லாரிகள்; 885 நான்கு சக்கர வாகனங்கள்; 38 படகுகள் மற்றும் 108 ஒளிரும் விளக்குகள் ஆகியவை தயாராக உள்ளது என்றார்.

மேலும், மின்சார விநியோகம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த தற்காலிக தங்குமிடமும் (பிபிஎஸ்) ஆய்வு செய்யப்படும் என்று வான் நஸ்மி கூறினார்.

"டி.என்.பி மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது, மேலும் வெள்ளம் பாதித்த மாநிலங்களில் நிலைமையை கண்காணிக்கவும் மின்சார விநியோகம் குறித்த சமீபத்திய தகவல்களை அனுப்பவும் செயல்பாட்டு அறைகளை திறக்கும்" என்று அவர் கூறினார்.

வெள்ளத்தின் போது மின்சார துண்டிப்பை எதிர்கொள்ளும்  நுகர்வோர், மேல் நடவடிக்கைக்கு உடனடியாக டி.என்.பி 15454 என்ற எண்ணில் அல்லது டி.என்.பி கேர்லைன் பேஸ்புக்  மூலம் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.