ALAM SEKITAR & CUACA

KUSEL வெள்ளத்தை எதிர்கொள்ள மாவட்ட மற்றும் நகராட்சி மன்றங்களுக்கு உபகரணங்கள் நன்கொடை

20 அக்டோபர் 2022, 8:48 AM
KUSEL வெள்ளத்தை எதிர்கொள்ள மாவட்ட மற்றும் நகராட்சி மன்றங்களுக்கு உபகரணங்கள் நன்கொடை

ஷா ஆலம், அக் 20: மாநிலத்தில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள, காரிடார் யுட்டிலிட்டி சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி (KUSEL) எனப்படும் நிறுவனம் ஊராட்சி மன்றம் (PBT) மற்றும் சிலாங்கூர் மாவட்ட மற்றும் நில அலுவலகம் (PDT) ஆகியவற்றிற்கு வெள்ள அபாயத்தை எதிர் கொள்ள தேவையான உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் வடகிழக்குப் பருவமழையின் போது வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் 14 யூனிட் போர்ட்டபிள் எலக்ட்ரிக் பவர் ஜெனரேட்டர்கள் மற்றும் 14 யூனிட் உயர் அழுத்த கிளீனிங் ஜெட்களை நன்கொடையாக எட்டு ஊராட்சி மன்றங்கள் மற்றும் 6 சிலாங்கூர் மாவட்டம் மற்றும் நில அலுவலகங்களுக்கு வழங்கி உள்ளதாக KUSEL இன் தலைவர் இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

"கூடுதலாக, ஒரே நேரத்தில் எட்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் OMB 15HP இன்ஜினுடன் கூடிய 'பாஸ்டன் வேலர்' பாதுகாப்பு படகும் நன்கொடையாக வழங்கப்பட்டது, இது வெள்ள காலங்களில் மீட்பு பணிகளுக்காக மாநில அரசால் இவை பயன்படுத்தப்படும்.

"கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பேரழிவால் உடைமைகள் மற்றும் உயிர் சேதம் ஏற்பட்டது, இதன் விளைவாக சுமார் RM14 லட்சம் இழப்பு ஏற்பட்டது, எனவே வெள்ள காலங்களில் பணிகளைச் சரியாகச் செய்ய இந்த உதவி மற்றும் ஆதரவு முக்கியமானது" என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற உபகரணங்களை வழங்கும் விழாவில் பேசிய உள்கட்டமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம், வெள்ளக் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான ஆதரவையும் உதவியையும் அதிகாரிகள் பெறுவதை உறுதி செய்வதே இந்த நன்கொடையின் நோக்கம்  என்றார்.

முன்னதாக, தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் சிலாங்கூரில் உள்ள எட்டு மாவட்டங்களை வெள்ளப்பெருக்கு மிரட்டல்களை எதிர்நோக்கும் இடங்களாகக் கண்டறிந்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.