ECONOMY

மனச்சோர்வு உள்ளவர்களுக்கு உதவ சேஹாட் தொலைபேசி சேவை- தயார் நிலையில் 30 ஆலோசகர்கள்

19 அக்டோபர் 2022, 8:37 AM
மனச்சோர்வு உள்ளவர்களுக்கு உதவ சேஹாட் தொலைபேசி சேவை- தயார் நிலையில் 30 ஆலோசகர்கள்

ஷா ஆலம், அக் 19- மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு பிரச்னையை எதிர்நோக்குவோர் சிலாங்கூர் அரசின் மெண்டல் சேஹாட் (சேஹாட்) எனும் தொலைபேசி வழி இலவச ஆலோசக சேவையைப் பெற அழைக்கப்படுகிறார்கள்.

இத்தகைய மன நலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்நோக்குவோருக்கு ஆலோசக சேவைகளை வழங்குவதற்கு தேர்ச்சி பெற்ற 30 மனநல ஆலோசகர்கள் தயாராக உள்ளதாக பொது சுகாகாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

நாட்டின் இரண்டாவது பெரிய சுகாதாரப் பிரச்னையாக மனநல குறைபாடு விளங்குவதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, மாநில அரசு வழங்கும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய ஆலோசனைகளைப் பெறும்படி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த சேவையைப் பெற 1700-82-7537 அல்லது 1700-82-7536 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ 30 தேர்ச்சி பெற்ற ஆலோசகர்கள் காத்திருக்கின்றனர் என்று அவர் சொன்னார்.

மனநல நிபுணர்களால் மனநலம் குறைபாடு உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு தொடக்கக் கட்ட சிகிச்சை வழங்குவதற்கான உதவியை மாநில அரசு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த சிகிச்சைக்கு உண்டாகும் முழு செலவையும் மாநில அரசு ஏற்றுக் கொள்ளும். நான்காவது ஆண்டாக இந்த சேஹாட் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்காக 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்ப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.