ECONOMY

தீபாவளியை முன்னிட்டு கிள்ளான் லிட்டில் இந்தியா சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்படும்

18 அக்டோபர் 2022, 3:43 AM
தீபாவளியை முன்னிட்டு கிள்ளான் லிட்டில் இந்தியா சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்படும்
தீபாவளியை முன்னிட்டு கிள்ளான் லிட்டில் இந்தியா சாலைகள் கட்டங் கட்டமாக மூடப்படும்

கோலாலம்பூர், அக் 18- கிள்ளான், ஜாலான் தெங்கு கிளானா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நான்கு நான்கு சாலைகள் வரும் புதன் முதல் திங்கள் வரை கட்டங் கட்டமாக போக்குவரத்துக்கு மூடப்படும்.

அடுத்த வாரம் கொண்டாடப்பட விருக்கும் தீபாவளியை முன்னிட்டு பொது மக்கள் அந்த வணிக வளாகத்தில் பொருட்களை வாங்குவதை எளிதாக்கும் வகையில் அச்சாலை மூடுவதாக தென் கிள்ளான் மாவட்ட போக்குவரத்து காவல்துறை அறிவித்தது.

அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படி பொது மக்களை அத்துறை தனது பேஸ்புக் பதிவின் வாயிலாக கேட்டுக் கொண்டது.

போக்குவரத்துக்கு சாலைகள் மூடப்படும் நாள் மற்றும் நேரம் வருமாறு-

அக்டோபர் 19 - புதன்கிழமை

(மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

1. ஜாலான் தெங்கு கிளானா/ ஜாலான் மொஹெட் (ஒருவழிச்சாலை)

20 அக்டோபர் - வியாழன்

(பின்னிரவு 12.01 முதல் நள்ளிரவு 12 வரை)

1. ஜாலான் தெங்கு கிளானா/ஜாலான் மொஹெட் (ஒருவழிச்சாலை)

21 அக்டோபர் - வெள்ளிக்கிழமை

(மாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

1. ஜாலான் தெங்கு கிளானா/ஜாலான் மொஹெட் (ஒருவழிச்சாலை)

2. டத்தோ ஹம்சா சாலை / இஸ்தானா சந்திப்பு  (ஷாரில் கிளினிக்)

3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)

4. ஜாலான் பெகாவாய்/ஜாலான் இஸ்தானா சாலை சந்திப்பு

22 அக்டோபர் - சனிக்கிழமை

(பின்னிரவு 12.01 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

1. ஜாலான் தெங்கு/ ஜாலான் மொஹெட் (ஒருவழிச்சாலை)

2. டத்தோ ஹம்சா சாலை / இஸ்தானா சாலை சந்திப்பு (ஷாரில் கிளினிக்)

3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)

4. ஜாலான் பெகாவாய் / ஜாலான் இஸ்தானா சந்திப்பு

23 அக்டோபர் - ஞாயிறு

(பின்னிரவு 12.01 முதல் நள்ளிரவு 12 வரை)

1. ஜாலான் தெங்கு கிளானா / ஜாலான் மொஹெட் (ஒருவழிச் சாலை)

2. டத்தோ ஹம்சா சாலை / இஸ்தானா சாலை சந்திப்பு (ஷரில் கிளினிக்)

3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)

4. ஜாலான் பெகாவாய் / ஜாலான் இஸ்தானா சாலை சந்திப்பு

24 அக்டோபர் - திங்கட்கிழமை

(பின்னிரவு 12.01 முதல் பகல் 6 வரை)

1. ஜாலான் தெங்கு கிளானா / ஜாலான் மொஹெட் (ஒருவழிச் சாலை)

2. டத்தோ ஹம்சா சாலை / இஸ்தானா சாலை சந்திப்பு (ஷரில் கிளினிக்)

3. லோரோங் திங்காட் (மேக்னம் முன்புறம்)

4. ஜாலான் பெகாவாய் / ஜாலான் இஸ்தானா சாலை சந்திப்பு

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.