ECONOMY

வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்தியர்களுக்கு வேண்டுகோள் -பந்திங் சட்டமன்ற உறுப்பினர்

18 அக்டோபர் 2022, 1:25 AM
வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்தியர்களுக்கு வேண்டுகோள் -பந்திங் சட்டமன்ற உறுப்பினர்
வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள இந்தியர்களுக்கு வேண்டுகோள் -பந்திங் சட்டமன்ற உறுப்பினர்

பந்திங், அக் 18 - பந்திங் சட்டமன்றம், கோல லங்காட் நகராண்மை கழகம் பிரிவு 14 ,18  மற்றும் சுங்கை சீடு சமூக நலச் சங்கம் ஆதரவுடன் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு 16- 10-2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் சுங்கை சீடு நம்பிக்கை கூட்டணி மையத்தில் நடைபெற்றது. இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சார்பில் சுங்கை சீடு சமூக நல சங்கத்தின் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தி வரவேற்றார்.

அதன்பின் உரை நிகழ்த்திய அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான், அங்கு  வாழும் இந்துக்களுக்கும் வருகை தந்தவர்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துகளை  தெரிவித்துக் கொண்டு தொகுதி மக்கள் மாநில அரசாங்கம் வழங்கும் சலுகைகளை பெற எப்பொழுதும் முந்த வேண்டும் என்றார்.

பல வாய்ப்புகள் நாம் சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்ள தவறுவதால் அது பலன் நமக்கு கிட்டாமல் போய் விடுகிறது என்றார். கோவிட் 19 நோய்த்தொற்று காலத்திற்கு பின் மக்கள் வேலை இழந்தும், சிலர் நோய்வாய்ப்பட்டு, விலை வாசிகள் உயர்வால் அதிக பொருளாதார இக்கட்டுகளில் உள்ளனர்.

அப்படிப்பட்ட மக்களுக்கு உதவ மாநில அரசு பல உதவி திட்டங்களை, அணுகு முறைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பொறுப்பற்ற அம்னோ தலைவர்கள் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, தேர்தல் நடத்த முற்பட்டுள்ளனர். இது ஒரு சிறந்த முன்னுதாரணம் எது சிறந்த ஆட்சி, யார் மக்கள் நலன் விரும்பி என அறியலாம் என்றார். இப்பொழுது மாநிலம்  முழுவதும் நடமாடும் சுகாதார உடல் பரிசோதனைகள் இம்மாநில மக்களுக்கு மாநில அரசு வழங்கி வருகிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை மிக மலிவான விலையில் மாநில மக்களுக்கு  விற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு பல மில்லியன் வெள்ளிகளை மாநில அரசு செலவு செய்து வருகிறது.

சுமார் 1.5 கிலோ எடைக் கொண்ட கோழி ஒன்று 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு B கிரேடு 30 முட்டைகள் கொண்டது 10.00 வெள்ளி, மீன்கள் கெம்போங் மற்றும் சிலாயாங் வகை ஒரு பை RM6, சமையல் எண்ணெய் 5kg (RM25) மற்றும் அரிசி 5kg (RM10) என்று விற்கப்படுகின்றன.

தீபாவளியை ஒட்டி இங்குள்ள மக்களின் வசதிக்காக எதிர்வரும் புதன்கிழமை 19-10 -2022 காலை மணி 9.00 முதல் சுங்கை சீடு தமிழ்ப்பள்ளிக்கு அருகில் விற்கப் படவுள்ளது. அதில் பொருட்களை வாங்கி பணத்தை மிச்சப்படுத்த மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அதனுடன் சிலாங்கூர் வாழும் மக்களுக்கு மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ள இலவச காப்புறுதி திட்டத்தில் அனைவரையும் பதிந்து கொள்ள கேட்டுக் கொண்டார். இந்த திட்டத்தின் வழி இயற்கையான இறப்பு மற்றும் விபத்து இறப்புகளுக்கு  வெள்ளி 10 ஆயிரம்  இறந்தவர் குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.

 

விபத்துகளும், உயிருக்கு ஆபத்து எந்த நேரத்திலும், எவருக்கும் ஏற்படலாம், ஆனால் அதனால் மக்கள் அவர் குடும்பத்தினர் அதிக துன்ப படுவதை தடுக்க, அந்த வேளைகளில்  மக்களுக்கு உதவ இலவச காப்புறுதிகள் வழங்கியுள்ள ஒரே மாநில அரசு சிலாங்கூர் மட்டுமே என்றார் அவர்.

 

இந்த காப்புறுதி திட்டதில் விரைந்து பதிவு செய்வதன் வழி, நீங்கள் இல்லாத நேரத்தில், உங்கள் அன்பிற்கு உரியவர்களை பொருளாதார சிக்கல்களில் தள்ளி விடுவதை  தவிர்க்கலாம் என்றார்.

 

அது போன்ற பல மக்கள் நல திட்டங்களை மக்களுக்கு செயல்படுத்தும் ஒரே மாநிலமாக, முன்னோடி மாநிலமாக சிலாங்கூர் அரசாங்கம் திகழ,'' மாநில வளம் மக்களுக்கே'' என்ற அதன் தாரக மந்திரமே காரணம் என்றார்.

ஆக மக்கள் இது போன்ற பொறுப்பான , மக்கள் நலன் போற்றும் ஆட்சி தேசிய நிலையில் அமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றியை அனைவரும்  உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.