ECONOMY

பொருளாதாரம் மலர்ச்சி அடைகிறது, மக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை அதிகரித்துள்ளது. 

17 அக்டோபர் 2022, 9:27 AM
பொருளாதாரம் மலர்ச்சி அடைகிறது, மக்கள் மேம்பாட்டுக்கான திட்டங்களை அதிகரித்துள்ளது. 

ஷா ஆலம், அக் 17: அரசியல் சார்பு இல்லாமல் மக்களுக்கு நேரடியாக பலனளிக்கும் பல திட்டங்களை சிலாங்கூர் வழங்குகிறது.

சிலாங்கூர் கெஅடிலான் மக்கள் கட்சியின் கருத்துப்படி, மக்கள் ஏசான் விற்பனை திட்டம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகும், இது பொருட்களின் விலையேற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மக்களுக்கு கை கொடுப்பதாகும்.

" மக்கள் ஏசான் விற்பனை திட்டத்தின் மூலம், சிலாங்கூர் மக்கள் மலிவாக பொருட்களை வாங்கலாம், சந்தை விலையுடன் ஒப்பிடும்போது குறைந்த விலையில் மூல மற்றும் அடிப்படை உணவுப் பொருட்களை வாங்கும் வாய்ப்பபை பொது மக்கள் பெற்றுள்ளனர்" என்று தகவல் தொடர்பு துணை இயக்குநர் அட்ஸ்மான் கமருடின் கூறினார்.

2008 ஆம் ஆண்டு முதல் அமல் செய்யப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாட்டால், மாநிலத்தின் பொருளாதார செயல்திறன் அதிகரித்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் விளக்கினார்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கோவிட்-19-ன் போது இலக்கவியல்  பொருளாதார திட்டத்தை செயல்படுத்தியது மாநிலத்தின் வளங்களை வெற்றிகரமாக நிர்வகிக்க என்று அவர் கூறினார்.

"பகேஜ் கித்தா சிலாங்கூர் 1.0 மற்றும் 2.0 போன்ற இலக்கு தூண்டுதல் தொகுப்புகள் மாநிலம் மற்றும் மக்களின் பொருளாதார மீட்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்று அட்ஸ்மேன் கூறினார்.

அனைத்து மாநிலத் தலைவர்களின் கூட்டுப் பணியின் பலனாக 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு சிலாங்கூரின் பொருளாதார செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று டத்தோ மந்திரி புசார் நேற்று தெரிவித்தார்.

மாநிலம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், 2017 இல் 23.2 உடன் ஒப்பிடும்போது 2021 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 24.8 விழுக்காட்டை அவர் தலைமையிலான மாநிலம் பங்களித்துள்ளது என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.