ECONOMY

தங்கையின் பல் உடைக்கும் அளவு பலமாக குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்

15 அக்டோபர் 2022, 5:55 AM
தங்கையின் பல் உடைக்கும் அளவு பலமாக குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்

கோலாலம்பூர், அக்.15: காஜாங்கின் தாமான் ரக்கானில் நேற்று நடந்த சம்பவத்தில் தனது தங்கையை காயப்படுத்தியதற்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமது ஜெய்த் ஹசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட 24 வயது இளைஞரிடமிருந்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது அடுத்து, 31 வயதுடைய நபர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவரது வீட்டில் கைது செய்யப் பட்டுள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்டவர் நேற்று இரவு 11 மணியளவில் தனது சகோதரரின் அறைக்கு அருகில் உள்ள சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது சண்டை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

அந்த நபர் தனது தலைமுடியை இழுத்து, குத்திய தாகவும், அறைந்ததாகவும், இதனால் அவரது முகத்தில் காயங்கள் மற்றும் முன் பல் உடைந்தது என்றும் முகமட் ஜெய்த் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325 இன் படி விசாரணைக்கு உதவுவதற்காக அக்.17 வரை நான்கு நாட்கள் சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டது அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.