ECONOMY

பிகேஎன்எஸ் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிறது; வணிகத் திறமையை பள்ளி காலத்திலிருந்து வளர்க்க வேண்டும்.

14 அக்டோபர் 2022, 1:04 PM
பிகேஎன்எஸ் இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிறது; வணிகத் திறமையை பள்ளி காலத்திலிருந்து வளர்க்க வேண்டும்.

ஷா ஆலம், 14 அக்: சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (பிகேஎன்எஸ்) 2022 விளம்பர விற்பனை துனாஸ் நியாகா (PROTUNe) திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய இளம் தொழில் முனைவோர் தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறையுடன் இணைந்து 147 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 141 மாணவர்கள் இம்முறை தொழில் முனைவோர் கலாச்சாரத் திட்டத்தில் கலந்துகொண்டதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

டத்தோ மாமூட் அப்பாஸின் கூற்றுப்படி, உணவு மற்றும் பானங்கள், சேவைகள், விவசாயம், ஆடை மற்றும் படைப்பு பொருட்கள் போன்ற பல்வேறு வணிக தயாரிப்புகளை வழங்கும் மூன்று நாள் நிகழ்வு நேற்று தொடங்கியது.

1998 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் வழி முதல் நாளில் 21,000 ரிங்கிட் விற்பனை மதிப்பு பதிவு செய்தது, நாளை வரை 200,000 ரிங்கிடை  அடைய  இலக்கு இருக்கிறது.

PROTUNe என்பது மாநிலம் முழுவதும் உள்ள முதல், இரண்டாம் மற்றும் நான்காம் படிவ  பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய ஒரு தொழில்முனைவோர் திட்டமாகும், இதில் பங்கேற்பாளர்கள் பிகேஎன்எஸ் இன் கீழ் ஒரு நிறுவனத்தை நிறுவி பதிவு செய்ய வேண்டும்.

அதன் மூலம், மாணவர்கள் தங்கள் தரத்தை மேம்படுத்த வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான பயிற்சியுடன் அந்தந்த பள்ளிகளில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.