ECONOMY

போதைப் பொருள் ஆய்வுக்கூடம் கண்டு பிடிப்பு- கணவன்,மனைவி கைது 

14 அக்டோபர் 2022, 9:58 AM
போதைப் பொருள் ஆய்வுக்கூடம் கண்டு பிடிப்பு- கணவன்,மனைவி கைது 

பாலேக் புலாவ், அக் 14- கோழி வியாபாரி மற்றும் அவரது மனைவியை கைது செய்ததன் வழி ஹெரோயின் பதப்படுத்தும் கூடத்தின் நடவடிக்கைகளை போலீசார் முடக்கியுள்ளனர்.

இங்குள்ள குளுகோர் மற்றும் பாயான் லெப்பாசில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 81,330  ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சோஃபியன் சாண்தோங் கூறினார்.

உளவு நடவடிக்கையின்  அடிப்படையில் குளுகோர் பகுதியில்  இரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தம்பதியை கைது  செய்து அவர்களிடமிருந்து 1,810 கிராம் எடையுள்ள  ஹெராயின் போதைப் பொருளை போலீசார் கைப்பற்றியதாக அவர்.

43 வயதான உள்ளூர் ஆடவரும்  30 வயதான அவரின் தாய்லாந்து மனைவியும் கொடுத்த தகவலின் பேரில் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கம்போங் புக்கிட், பாயான் லெபாஸில் உள்ள ஒரு வீட்டை போலீஸார் சோதனை செய்து அங்கு ஹெரோயின் பதப்படுத்தும் கூடம் இருப்பதைக் கண்டறிந்தனர் என்றார் அவர்.

அந்த வாடகை வீட்டில் நடத்திய சோதனையின் விளைவாக  14,880 கிராம் எடையுள்ள காஃபின், ஹெராயின் (2,720 கிராம்), யாபா மாத்திரைகள் (309.54 கிராம்) மற்றும் போதைப் பொருளை பதப்படுத்தும் ரசாயனங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர் என்று இன்று நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அந்த தம்பதியருக்கு ஹெராயின் தயாரிப்பதில் நிபுணத்துவம் உள்ளது தொடக்க கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து அவர்கள் கற்றுக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. மேலும், அவர்களுக்கு மூலப்பொருட்களை வழங்கிய கும்பலைக் கண்டறியும் முயற்சியில்  போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.