ஷா ஆலம், அக் 14- புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலான ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் நான்கு மாவட்டங்களை இலக்காக கொண்டு இன்று தொடங்குகிறது.
சபாக் பெர்ணம், சுங்கை பெசார் அரங்கில் இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மஸ்ஜிட் ஜாமேக் சுல்தான் ஹிஷாமுடின் பள்ளிவாசலுக்கு 5ஏ பாரத்தை அமிருடின் வழங்குவார். அதேவேளையில் மக்கள் விருந்து நிகழ்விலும் அவர் கலந்து கொள்வார்.
இம்மாதம் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் பாடாங் சுல்தான் சுலைமானிலும் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சிப்பாங், கே.பி.ஐ. செண்ட்ரலிலும் இந்நிகழ்வு நடைபெறும்.
இதனிடையே, வரும் செப்டம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் பெர்சியாரான் அஸ்சலாமில் இந்த நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வு ஏற்கனவே ஐந்து மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சி, இலவச மருத்துவ முகாம், அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை, கண்காட்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


