ஷா ஆலம், 13 அக்: பருவமழையின் அபாயத்தை கருத்தில் கொண்டு சிலாங்கூரில் உள்ள நிரந்தர வனப் பகுதியில் மலை ஏறும் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அனைத்தும் நவம்பர் 1 முதல் தற்காலிகமாக முடக்கப்படும்.
இந்த முடக்கம் ஜனவரி 31, 2023 வரை அமலில் இருக்கும் என்று சிலாங்கூர் மாநில வனத்துறை பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளது.
"சிலாங்கூரில் உள்ள நிரந்தர வனப் பகுதியில் அனைத்து மலை ஏறும் பாதைகள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அனுமதிக்கப்படவில்லை மற்றும் வருகையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மழைக் காலத்தை தொடர்ந்து தேவையற்ற அசம்பாவிதம் அல்லது விபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நவம்பர் நடுப்பகுதியில் இருந்து நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்யும், மாத இறுதியில் பெரும் வெள்ளம் ஏற்படும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் முன்னரே கணித்திருந்தது.
இம்மாதிரியான வானிலை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, ஏனெனில் இக் காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை செயலில் உள்ளது, இது தொடர்ச்சியான கனமழை மற்றும் பெரிய அளவிலான வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகிறது.



