ஷா ஆலம், அக் 13: மக்களுக்கு பல்வேறு உதவிகள் மற்றும் செயல்பாடுகளை உள்ளடக்கிய சிலாங்கூரின் மக்கள் சேவைகள் இரண்டாம் தொகுப்பு, அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சபாக் பெர்ணமில் உள்ள சுங்கை புசார் ஸ்டேடியத்தில் நடைபெறும்.
முன்னதாக ஐந்து மாவட்டங்களில் நடைபெற்ற சிலாங்கூரின் மக்கள் சேவைகளின் முதல் தொகுப்பில் கலை நிகழ்ச்சிகள், இலவச சுகாதார பரிசோதனைகள், மலிவான அடிப்படைப் பொருட்கள் விற்பனை, கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொருளாதார மேம்பாட்டுக்கு மனித ஆற்றல் என்ற கருப்பொருளுடன் நடக்கும் நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொழில் முனைவோர் மேம்பாட்டு நிதியை ஒப்படைத்தல் மற்றும் சிலாங்கூர் ஸ்மார்ட் வியாபார மைய சாவி வழங்குதல் போன்ற வைபவங்களும் அடங்கும்.
அக்டோபர் 14 ஆம் தேதி சபாக், ஜமேக் சுல்தான் ஹிஷாமுடின் மசூதியின் நில உரிம கடிதம் 5A-ஐ ஒப்படைப்பதுடன் பொது மக்கள் மற்றும் மசூதி அமைப்பாளர்களுடன் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடாகி உள்ளது.
லி டூர் டி லங்காவி சைக்கிள் போட்டியில் (எல்டிடிஎல்) நான்காவது கட்ட நிகழ்வு படி, மந்திரி புசார் சைக்கிள் ஓட்டத்தை அங்கிருந்து தொடக்கி வைப்பார் அது புறப்பட்டு பேராக்கின் மேரு ராயாவிற்கு செல்லும்.
முன்னதாக, இதே நிகழ்வு தாமான் கோசாஸ் அம்பாங் ஜெயா, மோரிப் கடற்கரை கோலா லங்காட், உத்தாமா ஸ்டேடியம் கோலா சிலாங்கூர், சதுக்கம் பவுல்வர்டு பெட்டாலிங் ஜெயா நகர சபை மற்றும் பத்து மலை பொது களம் கோம்பாக் ஆகிய இடங்களில் நடைபெற்றது.



