ஷா ஆலம், அக் 11- தஞ்சோங் காராங்கின் இரு இடங்களில் இன்று காலை 7.00 மணியளவில் தடுப்பணை உடைந்ததை சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுதிப்படுத்தியது.
இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பெக்கான் தஞ்சோங் காராங் மற்றும் ஜாலான் மஸ்ஜிட் பாரோ ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறினார்.
கரையை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது தடுப்பணை உடைந்து நகரில் நீர் புகுந்தது. இதனால் ஒரு சில இடங்களில் 0.3 முதல் 0.9 மீட்டர் வரை வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.
எனினும். இந்த வெள்ளம் காரணமாக குடியிருப்பாளர்கள் யாரும் வீடுகளிலிருந்து வெளியேற்ற படவில்லை எனக் கூறிய அவர், விரும்பத்தகாத சம்பவம் நிகழாதிருப்பதை உறுதி செய்ய தாங்கள் நிலைமையை அணுக்கமாக கண்காணித்து வருவதாக சொன்னார்.


