உலு லங்காட், அக் 7- பலாக்கோங் தொகுதியிலுள்ள வணிகர்கள் வருமானம் ஈட்டுவதற்கு உதவும் பொருட்டு பலாக்கோங் தொழிலியல், கலை மற்றும் கலாசார விழா இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் டத்தாரான் சி180இல் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு நாள் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் உணவுப் பண்டங்கள், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை பெற முடியும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வோங் சீயு கீ கூறினார்.
பெரும்பாலான வணிகர்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் தங்கள் வர்த்தகத்தைத் தொடக்கினர். தங்கள் வர்த்தகத்தை பிரபலப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இதுவே சரியான தளமாக விளங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விற்பனை விழா காலை 10.00 முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும்.
இவ்விழாவையொட்டி சிறார்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படும் என அவர் சொன்னார்.
பலாக்கோங் தொகுதி நிலையில் நிலையில் இன்று இங்கு நடைபெற்ற அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனையின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விற்பனை விழா குறித்து கருத்துரைத்த அவர், மேலும் அதிகமான மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக இந்த விற்பனை தொகுதியின் பிற இடங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.


