ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரின் எட்டு மாவட்டங்களில் மாலை 4.00 மணி வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும்

7 அக்டோபர் 2022, 6:11 AM
சிலாங்கூரின் எட்டு மாவட்டங்களில் மாலை 4.00 மணி வரை இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும்

ஷா ஆலம், அக் 7 - இன்று மாலை 4.00 மணி வரை சிலாங்கூரிலுள்ள எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

கோல சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட் மற்றும் சிப்பாங் மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படும் என்று அது கூறியுள்ளது.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய  மாநிலங்களிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என்று இன்று காலை 9.30 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் அத்துறை குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய தீவிரத்தன்மையுடன் மணிக்கு 20 மில்லி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் பட்சத்தில் அல்லது நீடிப்பதற்கான சாத்தியம் இருக்கும் பட்சத்தில் மலேசியா வானிலை ஆய்வுத் இந்த எச்சரிக்கையை விடுக்கும்.

இந்த இடியுடன் கூடிய மழை தொடர்பான எச்சரிக்கை வெளியிடப்பட்ட ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகியகால எச்சரிக்கையாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.