ECONOMY

அமைச்சர்: 2025ல் இடைநில்லா சுங்க வசூல் அறிமுகப்படுத்தப்படும்

6 அக்டோபர் 2022, 6:43 AM
அமைச்சர்: 2025ல் இடைநில்லா சுங்க வசூல் அறிமுகப்படுத்தப்படும்

கோலாலம்பூர், 6 அக்: சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கும் முயற்சியாக 2025ஆம் ஆண்டுக்குள் மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) எனப்படும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் சுங்க கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்த பொதுப்பணித்துறை அமைச்சகம் (கேகேஆர்) இலக்கு வைத்துள்ளது.

இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மூத்த பொதுப்பணித்து  துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.

MLFF நடைமுறைப்படுத்தப் பட்டதன் மூலம், சுங்கக் கட்டணம் செலுத்த வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், சுங்கச்சாவடிகள் இல்லை என்றும் அவர் கூறினார்.

"அடுத்ததாக அனைத்து சுங்க வரி வசூலிப்பு நிறுவனங்களுடனும் பயனர் வசதிக்கு இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

"அதன்பிறகு, MLFF அமைப்பில் இருந்து எவ்வாறு ஒருங்கிணைப்பது என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (எல்எல்எம்) நிர்வகிக்கப்படும் கட்டளை மையத்தை உருவாக்குவோம், இது அனைத்து நகராட்சிகள் அல்லது நகரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.

கூடுதலாக, நெரிசல் மற்றும் சாலை சேதத்திற்கு காரணமாக இருக்கும் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கண்டறியும் வாகன எடை அளவை உருவாக்கும் பணியையும் பொதுப்பணித் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளதாக ஃபாடில்லா தெரிவித்தார்.

சுமை வரம்பை தானாக கண்டறியும் வகையில், லாரி நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை  தொடரும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.