ECONOMY

மோசமான சாலைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் மலேசியாவுக்கு 12வது இடம்

4 அக்டோபர் 2022, 4:52 AM
மோசமான சாலைகளைக் கொண்ட நாடுகள் பட்டியலில் மலேசியாவுக்கு 12வது இடம்

ஷா ஆலம், அக் 4- ஐந்து ஆண்டுகளில் ஐந்து விழுக்காட்டிற்கும் மேலாக தரம் குறைந்த மோசமான சாலைகளைக் கொண்ட 59 நாடுகள் பட்டியலில் மலேசியா 12வது இடத்தில் உள்ளது.

அதோடு மட்டுமின்றி ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் 22.76 விழுக்காட்டினர் என்ற அடிப்படையில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் மலேசியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளதாக கல்வி நிறுவனமான ஸூடோபியின் ஆய்வில் தெரிவித்துள்ளது.

'மோசமான மற்றும் சிறந்த சாலைகள் - அமெரிக்கா மற்றும் சர்வதேச தரவரிசை' என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு குவைத்தை உலகின் மோசமான சாலைகள் கொண்ட நாடாக பட்டியலிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோஸ்டாரிகா, ஜார்ஜியா, பனாமா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

சாலை ஒருங்கமைப்பின் தரம், இறப்பு, ஒப்பீட்டு அளவு மற்றும் மேம்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியாவிற்கு 10க்கு 3.32 என்ற பாதுகாப்பு மதிப்பெண்ணை அந்த ஆய்வு வழங்கியது.

வாகனங்களைச் செலுத்துவதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் தாய்லாந்து, இந்தியா, அர்ஜென்டினா, அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் மலேசியாவையும் கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு உள்ளடக்கியுள்ளது.

இருப்பினும், நாட்டில் மது போதையில் ஏற்படும் சாலை விபத்துகளால் உண்டாகும் மரண எண்ணிக்கை மிகக்குறைவாக அதாவது 0.1 விழுக்காடாக உள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.