ECONOMY

சிலாங்கூர் சுக்மா விளையாட்டு சாதனை மறுமதிப்பீடு, எம்எஸ்.என் விளையாட்டு பயிற்சியை மறு சீரமைக்க உதவும்

3 அக்டோபர் 2022, 9:46 AM
சிலாங்கூர் சுக்மா விளையாட்டு சாதனை மறுமதிப்பீடு, எம்எஸ்.என் விளையாட்டு பயிற்சியை மறு சீரமைக்க உதவும்

ஷா ஆலம், 3 அக்: சிலாங்கூர் மாநில விளையாட்டு கவுன்சில் (எம்எஸ்என்) சிலாங்கூர் சுக்மா விளையாட்டு குழுவின் சாதனைகளை மறு ஆய்வு செய்வதன் வழி அதன் எதிர்கால போட்டியிடும் ஆற்றலை உயர்த்த முடியும்.

செப்டம்பர் 25 அன்று முடிவடைந்த சுக்மா 2022 விளையாட்டு வீரர்களின் செயல்திறன், பயிற்சி மற்றும் தயார் நிலையில் உள்ள பலவீனங்களைக் கண்டறிய ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அதன் நிர்வாக இயக்குனர் கூறினார்.

பல நிகழ்வுகளில் மாநில அணி இறுதி தேர்வை எட்டியதாகவும் ஆனால் அவை தோல்வியடைந்ததால் தங்க இலக்குகளின் எண்ணிக்கையை எட்ட முடியவில்லை என்றும் முகமது நிஜாம் மர்ஜுகி விளக்கினார்.

“எதிர்பார்த்ததை விட அதிக பதக்கங்களை வென்ற மற்ற மாநிலங்களை நாங்கள் மறு மதிப்பீடு செய்து பகுப்பாய்வு செய்வோம். இது செயல்திறன் அல்லது தொழில்நுட்ப காரணியா" என்று அவர் செப்டம்பர் 27 அன்று கூறினார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இரு வருட விளையாட்டுப் போட்டிகளுக்கான விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தையும், தடகள வீரர்களுக்கான தயார்படுத்தலையும் மாற்றியமைக்க தனது தரப்பு திட்டமிட்டுள்ளது என்று முகமது நிஜாம் மர்ஜுகி மேலும் கூறினார்.

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டு ஆண்டுகளில் மாநிலம் பல விளையாட்டு வீரர்களை இழந்தது, இந்த முறை அவர்களால் போட்டியிட முடியவில்லை என்று அவர் விளக்கினார்.

விளையாட்டுத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான், சிலாங்கூரை ஒட்டுமொத்தமாக ஐந்தாவது இடத்தில் வைக்கும் வகையில் போராடும் குணத்தை வெளிப் படுத்திய விளையாட்டு வீரர்களின் உறுதியை பாராட்டினார்.

"முதல் மூன்று இடங்களில் இல்லையென்றாலும், விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்றதைச் செய்ததால் அவர்களின் (சாதனை) நான் இன்னும் திருப்தி அடைகிறேன்," என்று அவர் கூறினார்.

விளையாட்டுப் போட்டியில், சிலாங்கூர் 31 தங்கம், 55 வெள்ளி மற்றும் 44 வெண்கலம் வென்றது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.