சிரம்பான், செப் 30- திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்த தாபீர் விலங்கை மோதி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் சிரம்பான்-கோல பிலா சாலையின் 17வது கிலோ மீட்டரில் நேற்றிரவு 11.15 மணியளவில் நிகழ்ந்தது.
இச்சம்பவம் நிகழ்ந்த போது அந்த 33 வயது ஆடவர் தனது ஹோண்டா ஆர்.எஸ். 150 ரக மோட்டார் சைக்கிளில் சிரம்பானிலிருந்து கோல பிலா நோக்கி சென்று கொண்டிருந்ததாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். அம்ரான் முகமது கனி கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்த அந்த தாபீர் விலக்கை தவிர்க்க முடியாமல் அவ்வாடவர் அதனை மோதினார். இதனால் மோட்டார் சைக்கிளிலிருந்து எறியப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் அந்த தாபீர் விலங்கும் உயிரிழந்து. அதன் உடல் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
இவ்விபத்து குறித்து 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


