ஷா ஆலம், செப் 30- சிலாங்கூர் அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நாளை மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த விற்பனை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.
அத்தியாவசிய உணவுப் பொருள்களான கோழி, முட்டை, இறைச்சி மீன் உள்ளிட்ட பொருள்களை சந்தையை விட மலிவான விலையில் விற்பனை செய்யும் இத்திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்பொருள்கள் தவிர, கெம்போங் அல்லது செலாயாங் மீன், சமையல் எண்ணெய், அரசி ஆகிய உணவுப் மூலப் பொருள்களும் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
சுங்கை பாஞ்சாங் தொகுதி நிலையிலான விற்பனை சுங்கை பாஞ்சாங் பாரிட் 16 பஸ் முனையத்திலும் பத்தாங் காலி தொகுதி நிலையிலான விற்பனை செரண்டா டத்தாரான் நியாகாவிலும் புக்கிட் அந்தாரா பங்சா தொகுதி நிலையிலான விற்பனை கம்போங் சுங்கை செரிங்கிலும் குவாங் தொகுதி நிலையிலான விற்பனை தாசேக் புத்ரி, புத்ரி சென்டல் பார்க்கிலும் நடைபெறும்.
தாமான் மேடான் தொகுதிக்கான விற்பனை பெட்டாலிங் ஜெயா, பிஜேஎஸ் 1, காஃபாய் பினாங்கிலும் பத்து தீகா தொகுதிக்கான விற்பனை லாமான் திஜரா கார் நிறுத்துமிடத்திலும் தஞ்சோங் சிப்பாட் தொகுதிக்கான விற்பனை கம்போங் தஞ்சோங் சிப்பாட், ஜாலான் செக்கோலாவிலும் டிங்கில் தொகுதிக்கான விற்பனை கம்போங் டேசா புத்ரா பாசார் மாலாம் வளாகம் மற்றும் தாமான் புத்ரா பெர்டானா பள்ளிவாசல் வளாகம் ஆகிய இடங்களிலும் நடைபெறும்.
மாநிலத்தின் 56 தொகுதிகளில் உள்ள 160 இடங்களில் இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.


