ஷா ஆலம், செப்டம்பர் 29: இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் பரிந்துரைக்கிறார்.
இன்று கொண்டாடப்படும் உலக இதய தினத்துடன் இணைந்து, உறுப்பின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான ஐந்து குறிப்புகளை டாக்டர் சித்தி மரியா மாமூட் பகிர்ந்துள்ளார்.
ஐந்து இதய சுகாதார குறிப்புகள் கீழ்வருமாறு:
-
ஆரோக்கியமான எடையுடன் இருங்கள்
- நல்ல பொருட்களைப் பயன்படுத்தி வீட்டில் சமைக்கவும்
-
உடல் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை வரம்புக்குள் வைத்து கொள்ள வேண்டும்
-
சீரான உணவு முறையை பராமரிக்கவும், சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைத் தொடரவும்.
-
இதயத்திற்கு உகந்த உணவை எடுத்துக் கொள்ளவும்.
-
நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைந்த உணவுகளை தேர்ந்தெடுக்கவும்
-
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்
-
நீங்கள் விரும்பும் செயல்பாட்டைத் தேர்வுசெய்து, காலப்போக்கில் மேம்படுத்தவும்
-
மன அழுத்தம் மேலாண்மைக்கு யோகா, தியானம் செய்யுங்கள்
இதய ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, மாநில அரசு இதய சிகிச்சை திட்டத்தை வழங்குகிறது, இது குறிப்பாக பி40 மற்றும் எம்40 நபர்களுக்கு இலவச சிகிச்சை வழங்குகிறது.
திட்டத்தின் மூலம், தகுதியான நபர்கள் RM50,000 வரை நிதியுதவி பெறுவார்கள்.



