ஷா ஆலம், செப்டம்பர் 29: இலவச இதய சிகிச்சை சேவைகளை வழங்கும் இதய சிகிச்சை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை (பி40) சிலாங்கூர் அரசாங்கம் அழைக்கிறது.
தகுதியுள்ள நபர்களுக்கு இதய சிகிச்சைக்காக RM50,000 வரை நிதியுதவி வழங்கப்படும் என்று பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட் கூறினார்.
"இதய சிகிச்சை திட்டம் மாநில அரசு நிர்ணயித்த நிபந்தனைகளின்படி குறைந்த வருமானம் கொண்ட பி40 பிரிவினருக்கு இதய சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.
"விண்ணப்பதாரர்கள் பி40 மற்றும் எம்40 வருமான பிரிவினராக இருக்க வேண்டும், அதிகபட்ச வருமான வரம்பு RM8,000 ஆக இருக்க வேண்டும், சிலாங்கூரில் பிறந்து அல்லது குறைந்தது 10 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்" என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.
அதன்படி, www.pedulisihat.com/cvs என்ற இணையதளம் மூலம் இத்திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை பொதுமக்கள் பெறலாம்.


