ஷா ஆலம், செப் 29- நாட்டில் நேற்று புதிதாக 2,445 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடித்துள்ளது உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 1,552 ஆக இருந்தது.
இதனுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சத்து 37 ஆயிரத்து 005 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
நாட்டில் 24,713 கோவிட்-19 சம்பவங்கள் இன்னும் தீவிர நிலையில் உள்ளன. அதில் பாதிக்கப்பட்டோரில் 23,567 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 1,105 பேர் மருத்துவமனைகளிலும் 57 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்களின் பயன்பாடு 61.7 விழுக்காடாக உள்ள வேளையில் அதில் 11.2 விழுக்காட்டு கட்டில்களில் கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோய்க்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 36,365 ஆக உயர்ந்துள்ளது.


