கோலாலம்பூர், செப்டம்பர் 26 - செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 24 வரையிலான தொற்றுநோயியல் வாரம் 38 இல் (ME 38/2022) மலேசியாவில் பதிவான புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 4.9 விழுக்காடு குறைந்து 12,963 ஆக இருந்தது.
" தினசரி செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கை 25,325 ஆகும், இது முந்தைய வாரத்தை விட நான்கு விழுக்காடு குறைவு" என்று சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
உள்ளூர் சம்பவங்கள் 4.8 விழுக்காடு குறைந்து 12,934 சம்பவங்கள் உள்ளன. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் 31 விழுக்காடு குறைந்து 29 சம்பவங்கள் உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
குணப்படுத்தப்பட்ட சம்பவங்கள் 5.8 விழுக்காடு குறைந்து 13,677 சம்பவங்களாக உள்ளது என்றார்.
இறப்பு எண்ணிக்கை 29 விழுக்காடு அதிகரித்துள்ளது," என்று அவர் கூறினார்.
ஜனவரி 25, 2020 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் 24 வரை, நாட்டில் மொத்தம் 4,830,214 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகின என்று டாக்டர் நோர் ஹிஷாம் கூறினார்.


