ஷா ஆலம், செப்டம்பர் 26: மலிவு விலையில் அன்றாட தேவைகளை வழங்கிடும் நடமாடும் அங்காடி (மக்கள் ஏசான்) நாளை மேலும் 9 இடங்களில் தொடரும்.
சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) நடத்தும் மலிவான விற்பனை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
மக்கள் ஏசான் விற்பனை இடங்களின் பட்டியல் கீழ்வருமாறு:
- அட் துகா மசூதியின் முன் (சுங்கை பூரோங் சட்டமன்றம்)
- கம்போங் பாரிட் செரோங் எம்பிகேகே நிலையம் (பெர்மாத்தாங் சட்டமன்றம்)
- டேவான் ஓராங் ராமாய் (புக்கிட் மெலாவத்தி சட்டமன்றம்)
- புத்தேரி மத்திய பூங்கா (குவாங் சட்டமன்றம்)
- பார்க்கிங் பிகேஎம் உலு சட்டமன்றம் (உலு கிள்ளான் சட்டமன்றம்)
- பெங்குலு வளாகம் (பண்டான் இண்டா சட்டமன்றம்)
- பிளாட் SS19/7A (சுபாங் ஜெயா சட்டமன்றம்)
- செபகாட் கிராமம் பார்க்கிங் (தாமான் மேடான் சட்டமன்றம்)
- டத்தாரான் அல் உலும் (தஞ்சோங் சிப்பாட் சட்டமன்றம்)
இந்த விற்பனையில் நடுத்தர கோழி RM10, புதிய திட மாட்டு இறைச்சி (ஒரு பேக் RM10) பி கிரேடு முட்டை (ஒரு தட்டு RM10) மீன் (ஒரு பேக் RM6) கிடைக்கும்.
பிகேபிஎஸ் மலிவான விற்பனை திட்டம் இந்த ஆண்டு இறுதி வரை 160 இடங்களில் ஊராட்சி மன்றங்களுடன் நடத்தப்படவுள்ளது.



